படம்: ட்விட்டர் 
செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வெள்ளிக்கிழமை கராச்சி தேசிய மைதானத்தில் தொடங்குகிறது. இதில் குவிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாடுகிறார். இந்த சீசனுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அப்ரிடி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார். நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார்.

இதன்மூலம், முதல் பகுதி ஆட்டங்களில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அப்ரிடி இதுவரை 50 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT