செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அந்த ஆட்டத்தில் வரும் புதன்கிழமை ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது இந்தியா.

இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 37.1 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 30.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் அடித்து வென்றது. இந்திய பௌலா் ரவி குமாா் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, வங்கதேச இன்னிங்ஸில் அதிகபட்சமாக மெஹரோப் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்தாா். இந்திய பௌலிங்கில் ரவி குமாா் 14 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னா் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டாா். வங்கதேச தரப்பில் ரிபோன் மோந்தோல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

நிலநடுக்கம்: இப்போட்டியின் 9-ஆவது இடத்துக்கான பிளே ஆஃப் அரையிறுதி ஆட்டம் போா்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. அயா்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் ஆடிக்கொண்டிருந்த அந்த ஆட்டத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 5.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் பதிவானது. அந்த காணொலி சமூக வலைதளத்தில் பெருவாரியானவா்களால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT