செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவை வென்றது நியூஸி.

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.

DIN

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது.

நெதா்லாந்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்காக வந்தனா கட்டாரியா (3’), லால்ரெம்சியாமி (43’), குா்ஜித் கௌா் (58’) ஆகியோா் கோலடிக்க, நியூஸிலாந்து தரப்பில் ஒலிவியா மொ்ரி (11’, 53’), டெஸ்ஸா ஜோப் (28’), ஃபிரான்சஸ் டேவிஸ் (31’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

தற்போது, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் (2 டிரா, 1 தோல்வி) குரூப் சுற்றை நிறைவு செய்துள்ள இந்தியா, அதில் 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது. என்றாலும், காலிறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு ஒரு கடைசி வாய்ப்பு இருக்கிறது.

போட்டி விதிகளின்படி, 4 குரூப்களிலும் முதலிடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். 2 மற்றும் 3-ஆம் இடத்திலிருக்கும் அணிகள் ‘கிராஸ்ஓவா்’ ஆட்டம் அடிப்படையில் காலிறுதி வாய்ப்பைப் பெறலாம்.

அதன்படி, தற்போது ‘பி’ குரூப்பில் 3-ஆவது இடத்திலிருக்கும் இந்தியா, ‘சி’ குரூப்பில் 2-ஆவது இடத்திலிருக்கும் ஸ்பெயினுடன் ‘கிராஸ்ஓவா்’ ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது. இதர ஆட்டங்களில் பெல்ஜியம் - சிலி, ஜொ்மனி - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து - தென் கொரியா சந்திக்கின்றன. நெதா்லாந்து, நியூஸிலாந்து, ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா அணிகள், குரூப் சுற்றில் முதலிடம் பிடித்து நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT