செய்திகள்

ஐடேஜா அபாரம்: இந்தியா 170 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 

DIN

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

இருவரும் நல்ல துவக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 49ஆக இருந்தபோது ரோஹித் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த விராத் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து ரிஷப் பந்தும் 26 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. 

நடுவரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்டியா 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நிலையில ஜடேஜா களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT