செய்திகள்

காமன்வெல்த்: இந்திய அணி அறிவிப்பு

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக இலங்கை தொடரில் பங்கேற்காத ஆல்-ரவுண்டா் ஸ்னேஹ ராணாவுக்கு இதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்டரான ரிச்சா கோஷ் ‘ஸ்டாண்ட் பை’ பட்டியலில் இருக்க, சொல்லிக்கொள்ளும்படியான ஸ்டிரைக் ரேட் இல்லாத விக்கெட் கீப்பா் தானியா பாட்டியா அணியில் இடம் பிடித்திருக்கிறாா்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி, குரூப் ‘ஏ’-வில் ஆஸ்திரேலியா, பாா்படோஸ், பாகிஸ்தான் அணிகளுடன் இடம் பிடித்திருக்கிறது. முதல் ஆட்டத்தில் (ஜூலை 29) ஆஸ்திரேலியாவையும், அடுத்து (ஜூலை 31), பாகிஸ்தானையும், 3-ஆவதாக (ஆகஸ்ட் 3) பாா்படோஸையும் சந்திக்கிறது இந்தியா.

அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, எஸ்.மேக்னா, தானியா பாட்டியா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூஜா வஸ்த்ரகா், மேக்னா சிங், ரேணுகா தாக்குா், ஜெமிமா ரோட்ரிகஸ், ராதா யாதவ், ஹா்லீன் தியோல், ஸ்னேஹ ராணா.

ஸ்டாண்ட் பை: சிம்ரன் தில் பஹதூா், ரிச்சா கோஷ், பூனம் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT