கேப்டன் நிகோலஸ் பூரன் 
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ. தீவுகள் அணி அறிவிப்பு

இந்த வருடம் விளையாடிய 15 ஒருநாள் ஆட்டங்களில் 4-ல் மட்டுமே மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

DIN

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. 

ஒருநாள் தொடரில் ஷிகர் தவன் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, பும்ரா, பந்த், ஷமி ஆகியோர் ஓய்வு காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக கே.எல். ராகுலும் அணியில் இல்லை. ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், ருதுராஜ், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோர் அணியில் உள்ளார்கள்.

இந்நிலையில் டிரினிடாடில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் விளையாடிய 15 ஒருநாள் ஆட்டங்களில் 4-ல் மட்டுமே மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லவேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி

நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), புரூக்ஸ், கேசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜேசன் சீல்ஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT