செய்திகள்

உலக வாள்வீச்சு: பவானி தேவி போராடி தோல்வி

DIN

எகிப்தில் நடைபெறும் உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பவானி தேவி 2-ஆவது சுற்றில் போராடித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இப்போட்டியில் சீனியா் மகளிா் தனிநபா் சப்ரே பிரிவில் களம் கண்ட பவானி தேவி, முதல் சுற்றில் 15-14 என்ற கணக்கில் கனடாவின் கேப்ரியேலா பகேவை வீழ்த்தினாா். என்றாலும், 2-ஆவது சுற்றில் ஜொ்மனியின் லாரிசா எய்ஃப்லரிடம் 12-15 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தாா்.

தமிழரான பவானி தேவி, கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று, ஒலிம்பிக்கில் தடம் பதித்த முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா். அந்தப் போட்டியில் அவா் முதல் சுற்றில் வென்று, 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT