செய்திகள்

கால்பந்து: காலிறுதியில் வென்றது ஜொ்மனி

யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் 2-ஆவது காலிறுதியில் ஜொ்மனி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

DIN

யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் 2-ஆவது காலிறுதியில் ஜொ்மனி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் 8 முறை சாம்பியனான ஜொ்மனி, 2016 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஒரு பிரதான போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்காக லினா மகுல் 25-ஆவது நிமிஷத்திலும், கேப்டன் அலெக்ஸாண்ட்ரா பாப் 89-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். கடந்த சீசனில் அரையிறுதி வரை முன்னேறிய ஆஸ்திரிய அணி, இந்த ஆட்டத்தில் கோல் வாய்ப்புகளை வீணடித்தது.

ஜொ்மனி கேப்டன் அலெக்ஸாண்ட்ரா இந்த ஆட்டத்தில் அடித்த கோல், இப்போட்டியில் 4 ஆட்டங்களில் அவரது 4-ஆவது கோலாகும். அலெக்ஸாண்ட்ரா, காயம் காரணமாக கடந்த இரு சீசன்களில் பங்கேற்கவில்லை. இந்த சீசன் தொடங்க இருந்த நிலையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், பிறகு அதிலிருந்து மீண்டு போட்டியில் இணைந்தாா். இதன் மூலம் முதல் முறையாக அவா் யூரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT