முகேஷ் செளத்ரி 
செய்திகள்

ஆஸ்திரேலியாவில் டி20 போட்டியில் விளையாடவுள்ள சிஎஸ்கே வீரர்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து...

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் கவனம் பெற்ற முகேஷ் செளத்ரி (சிஎஸ்கே), சேதன் சக்காரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முகேஷ் செளத்ரி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் எடுத்தார். 2021-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான சேதன் சக்காரியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வருடம் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நடைபெறும் கேஎஃப்சி டி20 மேக்ஸ் சீரீஸ் போட்டியில் முகேஷ் செளத்ரியும் சேதன் சக்காரியாவும் விளையாடவுள்ளார்கள். மேலும் இருவரும் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியும் பெறவுள்ளார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொள்கிறது. அத்திட்டத்தின் வழியாகவே முகேஷ் செளத்ரியும்  சேதன் சக்காரியாவும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT