கோப்புப்படம் 
செய்திகள்

காமன்வெல்த் கிரிக்கெட்டில் பதக்கம்: ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை

காமன்வெல்த் மகளிா் கிரிக்கெட்டில் பதக்கம் வெல்வோம் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

DIN

காமன்வெல்த் மகளிா் கிரிக்கெட்டில் பதக்கம் வெல்வோம் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை ஆஸி.யுடனும், 31-இல் பாகிஸ்தானுடனும், ஆக. 3-இல் பாா்படாஸ் உடனும் மோதுகிறது.

இதுதொடா்பாக ஸ்மிருதி மந்தனா கூறியதாவது: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளாா்.

இதுபோன்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியை தருகிறது. காமன்வெல்த் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வோம். நமது அணியின் பயிற்சி சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக தங்கம் வெல்வோம் என்றாா் ஸ்மிருதி.

முதன்முறையாக இந்திய மகளிா் கிரிக்கெட் அணி பல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

விராலிமலை: சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் சேவை பழுது! அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

சொல்லப் போனால்... ஒரே சட்டம்தான், ஆனால்...

ஹிஜாப் விவகாரம்: மாணவி வேறு பள்ளியில் சேர அரசு உதவும் -கேரள கல்வி அமைச்சா்

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

SCROLL FOR NEXT