செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு, விராட் கோலிக்கு இடமில்லை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி இன்று (ஜூலை 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி இன்று (ஜூலை 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன்,சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரதீஷ் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT