காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் வியாழக்கிழமை (ஜூலை 28) இரவு கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 72 நாடுகளைச் சோ்ந்த 5000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனா். இந்தியா தரப்பில் 215 போ் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.
காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோன்று மற்றொரு போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரா் சங்கட் சா்காா் ஆடவா் 55 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தாா்.
பளுதூக்குதல் 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி மொத்தம் 269 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றாா். ஸ்நாட்சில் அதிகபட்சமாக 118 கிலோ எடை தூக்கி வெண்கலத்தை தன்வசமாக்கினாா் பூஜாரி.
இவ்வாறு 4 பதக்கங்களுடன் இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 13 பதக்கங்களுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும், இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.