படம்: டிவிட்டர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா |ஆண்ரூவ் மெக்டொனல்ட் 
செய்திகள்

ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளருக்கு கோவிட் தொற்று

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். 

செவ்வாய்க்கிழமை மதியம் மெக்டொனால்ட்க்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவரால் இலங்கைத் தொடரில் பங்கேற்க முடியாது. 

ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது டிவிட்டர் பக்கத்தில், “பயிற்சியாளருக்கு ஓய்வு. அதுவரை மைக்கேல் டி வெனுடோ ஆஸ்திரேலியாவின் ஆண்கள் டி20 அணிக்கு பயிற்சியளிப்பார். மெக்டொனால்ட் 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்வார்” என கூறியிருந்தது. 

இந்தத் தொடரில் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆடம் ஜாம்பா குழந்தைப் பேறுகால விடுமுறையில் உள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் 3 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் இந்த தொடர் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஹ்ம்ம்ம்... அனஸ்வரா ராஜன்!

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா!

34 நாள்களில் 100 தொகுதிகள்... இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம்!

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

SCROLL FOR NEXT