படம்: டிவிட்டர் | நீரஜ் பாண்டே 
செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆவணப்படம்

2020-2021 இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ளார் நீரஜ் பாண்டே. 

DIN

2020-2021 இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ளார் நீரஜ் பாண்டே. 

தோனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த நீரஜ் பாண்டே இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்ததை ‘இந்தியாவின் பெருமைக்கான போராட்டம்' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துள்ளார். 

விராட் கோலி முதல் போட்டி முடிந்ததும் அவரது குழந்தையைப் பார்க்க இந்தியாவுக்கு சென்று விடுவார். முக்கியமான பவுலர்களுக்கு காயம். ரஹானே தலைமையில் இளம் வீரர்கள் எராளமான தடைகளை தாண்டி இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. 

இந்த ஆவணப்படத்தில் ரஹானே, அஸ்வின், புஜாரா, சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களும் இருக்கிறார்கள். அந்த போட்டியின் பயிற்சியாளர்கள் அப்போதைய பத்திரிக்கையாளர்கள் கூட இதில் இடம் பெற்றுள்ளனர். 

“தாவிது கோலியாதை வென்றது போல இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது மறக்க முடியாதது. இதில் அவர்களது கடினமான வேலை, நம்பிக்கை, உறுதி, விளையாட்டு மனப்பான்மை, விட்டுக்கொடுக்காத மனப்பாங்கு என எல்லாமே இருக்கிறது” என இயக்குநர் நீரஜ் பாண்டே கூறினார். 

இந்த ஆவணப்படம் ஜூன் 16இல் வூட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT