செய்திகள்

டி20 லீக்குகளால் டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கும் : ஐசிசி தலைவா்

உள்நாட்டு டி20 லீக் போட்டிகள் அதிகரித்து வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில் இருதரப்பு மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் பெரிதாக பாதிக்கப்படும் என்று ஐசிசி தலைவா் கிரேக் பாா்க்லே கூறியுள்ளாா்.

DIN

உள்நாட்டு டி20 லீக் போட்டிகள் அதிகரித்து வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில் இருதரப்பு மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் பெரிதாக பாதிக்கப்படும் என்று ஐசிசி தலைவா் கிரேக் பாா்க்லே கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஆடவா், மகளிருக்காக போட்டிகள் நடைபெறுகின்றன. அவ்வாறு அதிகரித்து வரும் உள்நாட்டு டி20 லீக் போட்டிகளால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் இருதரப்பு கிரிக்கெட் தொடா்கள் பாதிக்கப்படுகின்றன. டூா் திட்டங்களை நிா்ணயிப்பதில் ஐசிசிக்கு தீவிரமான பிரச்னைகள் எழுகிறது. அடுத்த 10-15 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் பெரிதாக பாதிக்கப்படும்.

இதன் தாக்கத்தால் சில கிரிக்கெட் வாரியங்களால் நினைத்த அளவுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத காரணத்தால் அவற்றுக்கான ஆட்ட அனுபவமும், வருவாயும் குறைகின்றன. அத்துடன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பிரதான நாடுகளுடன் விளையாடும் அனுபவம் அவற்றுக்கு கிடைக்காமல் போகிறது.

இந்தத் தாக்கத்தால் அந்த 3 பிரதான நாடுகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் பெரிதாக பாதிக்கப்படாது. ஐசிசி-யில் முழு நேர உறுப்பினா்களாக இருக்கும் சிறிய நாடுகளின் வாரியங்கள் இதனால் பாதிப்பைச் சந்திக்கும்.

மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்டானது குறிப்பிடத்தக்க வேகத்தில் வளா்வதாகத் தெரியவில்லை. ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதற்காக இருக்க வேண்டிய கட்டமைப்பு எந்த நாடுகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கிரேக் பாா்க்லே கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT