செய்திகள்

அழுத்தம் தாங்காமல் டான் பிராட்மேனின் மகன் தனது பெயரையே மாற்றிக்கொண்டார் : கபில் தேவ்

DIN

தலைசிறந்த பேட்ஸ்மன்களின் மகனாக இருப்பது வரமும் சாபமும் போன்றது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். 

அர்ஜுன் டெண்டுல்கர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். அவரை ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

“அவரைப் பற்றி எல்லோரும் ஏன் பேசுகிறார்கள்? அவர் சச்சின் மகன் என்பதால். அவரது இயற்கையான ஆட்டத்தை ஆட விடுங்கள். சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். டெண்டுல்கரின் மகனாக இருப்பது வரமும் சாபமும் போன்றது. பிராட்மேன் போல ஆட வேண்டுமென மற்றவர்கள் எதிர்பார்ப்பதன் அழுத்தம் தாங்க   முடியாமல் டான் பிராட்மேனின் மகன் தனது பெயரையே மாற்றிக்கொண்டார். அர்ஜூன் ஒரு இளைஞன். அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள். அவரது இயல்பான விளையாட்டை விளையாட அனுமதியுங்கள்” என கருத்து தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT