செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டன் புதிய சாதனை

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

DIN

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முல்தானில் நடைபெற்ற முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்டரான ஷாய் ஹோப் 127 ரன்களும் புரூக்ஸ் 70 ரன்களும் எடுத்தார்கள். ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் ஆஸம் 103 ரன்களும் இமாம் உல் ஹக் 65 ரன்களும் ரிஸ்வான் 59 ரன்களும் குஷ்தில் ஷா 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 85 இன்னிங்ஸில் 17 சதங்கள் எடுத்துள்ளார் பாபர் ஆஸம். 

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 5 இன்னிங்ஸில் பாபர் ஆஸம்

158(139)
57(72)
114(83)
105*(115)
103(107)

இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று சதங்களை இருமுறை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் ஒரு கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற மற்றொரு சாதனையையும் பாபர் ஆஸம் படைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!

சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT