செய்திகள்

தில்லியில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்குமா?

DIN

கடந்த பிப்ரவரி மாதம், இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக அதிக டி20 ஆட்டங்களில் வென்ற அணி என்கிற சாதனையைச் சமன் செய்தது. 

இலங்கையை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றது இந்திய அணி. டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் உலக சாதனையை இந்திய அணி சமன் செய்தது. இரு அணிகளும் தொடர்ச்சியாகத் தலா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளன. 

ரோஹித் சர்மா தலைமையில் சமீபமாக நியூசிலாந்து, மே.இ. தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி தலா 3-0 என முழு வெற்றிகளைப் பெற்றது. இந்த 9 வெற்றிகளுடன் அதற்கு முன்பு டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

தொடர்ச்சியான 12 வெற்றிகளுடன் உலக சாதனையைச் சமன் செய்த இந்திய அணி, தில்லியில் இன்று நடைபெறும் டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோதுகிறது. 

இந்தியாவுடன் உலக சாதனையைக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தனது சாதனையை 2018 பிப்ரவரி முதல் 2019 செப்டம்பர் வரை நிகழ்த்தியது. இதனால் அந்த அணியால் இந்தியாவுடன் இனி போட்டி போட முடியாது. அதே 12 தொடர்ச்சியான வெற்றிகளுடன் உலக சாதனையைக் கொண்டுள்ள இன்னொரு அணி, ரொமானியா. எனினும் அது டெஸ்ட் விளையாடும் தேசம் அல்ல. அந்த அணி சிறிய நாடுகளுடன் விளையாடி அச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதனால் டெஸ்ட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக அதிக டி20 வெற்றிகளைப் பெற்ற அணி என்கிற உலக சாதனையை இந்தியா இன்று நிகழ்த்துமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT