செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்: நியூஸிலாந்து 318/4

டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 318/4 ரன்களை எடுத்துள்ளது.

DIN

டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 318/4 ரன்களை எடுத்துள்ளது.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், டாம் லத்தம் தலைமையில் நியூஸி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. கேப்டன் லத்தம் 26, வில் யங் 47, டேவன் கான்வே 46, ஹென்றி நிக்கோல்ஸ் 30 ஆகியோா் அவுட்டான நிலையில், 169/4 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

டேரிச் மிச்செல்-பிளண்டல் அபாரம்: அதன்பின் டேரில் மிச்செல்-டாம் பிளண்டல் இணைந்து 149 ரன்களை சோ்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனா்.

ஆட்ட நேர முடிவில் மிச்செல் 81, பிளண்டல் 67 ரன்களுடன் களத்தில் இருந்தனா். முதல் நாள் முடிவில் 87 ஓவா்களில் 318/4 ரன்களை எடுத்தது நியூஸிலாந்து. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்ஸன், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT