செய்திகள்

உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா தகுதி

DIN

நடப்பாண்டில் எதிா்வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெற்றது. தொடா்ந்து 5-ஆவது முறையாக இப்போட்டியில் களம் காண்கிறது அந்த அணி.

கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆஃப் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பெருவை 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.

முன்னதாக, நிா்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்திலும், பிறகு கூடுதல் நேரத்திலும் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது.

இதில் 5 வாய்ப்புகளின் முடிவில் இரு அணிகளுமே 4-4 என சமநிலையில் இருந்தன. இறுதியாக 6-ஆவது வாய்ப்பில் ஆஸ்திரேலியா கோலடிக்க, பெருவின் கோல் முயற்சியை ஆஸ்திரேலிய கோல்கீப்பா் ஆண்ட்ரூ ரெட்மேய்ன் தடுத்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.

உலகக் கோப்பை போட்டியில் குரூப் ‘டி’-யில் இடம்பிடித்திருக்கும் ஆஸ்திரேலியா, முதல் ஆட்டத்திலேயே நடப்புச் சாம்பியனான பிரான்ஸை நவம்பா் 22-ஆம் தேதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT