டெஸ்ட் போட்டியில் 11வது வீரராக களமிறங்கி அதிகபட்ச ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் டிரெண்ட் போல்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விலையாடிவரும் நியூசிலாந்து அணியின் 11வது வீரர் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சுக்குதான் பிரபலம். ஆனால் தற்போது பேட்டிங்கில் புதிய சாதனயைப் படைத்துள்ளார். 11வது வீரராக களமிறங்கும் வீரர்களில் அதிக ரன்னை அடித்த இவர் முத்தையா முரளிதரனை சமன் செய்துள்ளார். குறைவான போட்டியியிலேயே அதை சாத்தித்தால் போல்ட் முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை, 11வது வீரராக களமிறங்கி அதிகபட்ச ரன்களை எடுத்தவர்கள் விவரம் பின்வருமாறு:
டிரெண்ட் போல்ட் - 623 (78 இன்னிங்ஸ்)
முத்தையா முரளிதரன் - 623 (98 இன்னிங்ஸ்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 609 (164 இன்னிங்ஸ்)
கிளென் மெக்ராத் - 603 (164 இன்னிங்ஸ்)
வால்ஸ் - 553 (122 இன்னிங்ஸ்)
இதையும் படிக்க: கவாஸ்கரை முந்திய ஜோ ரூட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.