கோப்புப் படம் 
செய்திகள்

‘டி20 உலக கோப்பைக்கு அவர் இருந்தால் இந்தியாவுக்கு கூடுதல் பலம்’ - சுனில் கவாஸ்கர் குறிப்பிடுவது யாரை?

டி20 உலக கோப்பைக்கு புவனேஸ்வர் குமார் விளையாடினால் இந்தியாவுக்கு கூடுதல் பலமாக இருக்குமென முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

DIN


டி20 உலக கோப்பைக்கு புவனேஸ்வர் குமார் விளையாடினால் இந்தியாவுக்கு கூடுதல் பலமாக இருக்குமென முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

டி20 உலக கோப்பை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிறது. புவனேஷ்க்கு பவுன்ஸ் வீசும் திறமை இருப்பதால் அவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கு மிகவும் ஏற்புடையவராக இருப்பார் என கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஷ் சிறப்பாக பந்து வீசுவது அவரை கவர்ந்ததாக குறிப்பிட்டார்.

கடினமான சூழ்நிலையிலும் இரண்டாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து 13 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஹென்ரிகஸ் இன்ஸ்விங் பந்தில் பலவீனம் என்பது அவருக்கு தெரியும். வெள்ளை பந்து அவ்வளவாக திரும்பவில்லை, ஆனால் புவனேஷ்க்கு பந்தை எப்படி ஸ்விங் செய்ய வேண்டுமெனத் தெரியும். பிரிட்டோரியஸ்க்கு ஸ்லோவர் பந்து வீசி வெக்கெட் எடுத்தார். இவரைப் போன்ற ஒருவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் இருந்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்” என சுனில் கவாஸ்கர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT