செய்திகள்

டி20 தொடர்: பிரபல தெ.ஆ. வீரர் விலகல்

அடுத்த டி20 ஆட்டம் ராஜ்கோட் நகரில் நாளை நடைபெறவுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் விலகியுள்ளார்.

கடந்த ஜூன் 8 அன்று தெ.ஆ. பேட்டர் மார்க்ரம், கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஏழு நாள் தனிமைப்படுத்தப்பட்ட மார்க்ரம், தற்போது டி20 தொடரிலிருந்து விலகி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பியுள்ளார். கரோனா பாதிப்பு நீங்கினாலும் டி20 ஆட்டங்களில் உடனடியாக விளையாட முடியாத காரணத்தால் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். 

27 வயது மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 31 டெஸ்டுகள், 38 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 
விசாகபட்டினத்தில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. அடுத்த டி20 ஆட்டம் ராஜ்கோட் நகரில் நாளை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT