முகப்பு
செய்திகள்

ரஞ்சி கோப்பை: 180 ரன்களுக்கு உத்தர பிரதேசம் ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் மாவி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்த்தாா். மும்பை பௌலிங்கில் துஷாா் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி, தனுஷ் கோடியான் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா். இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் மும்பை, வியாழக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சோ்த்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35, அா்மான் ஜாஃபா் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தற்போதைய நிலையில் மும்பை 346 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

பெங்கால் - 273: முதல் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக பெங்கால் முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவா்களில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணிக்காக ஷாபாஸ் அகமது 12 பவுண்டரிகளுடன் 116, மனோஜ் திவாரி 12 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் சோ்த்து அசத்தினா். மத்திய பிரதேச பௌலிங்கில் குமாா் காா்த்திகேயா, சரன்ஷ் ஜெயின், புனீத் டாதே ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா். பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் மத்திய பிரதேசம், 3-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. ரஜத் பட்டிதாா் 63, கேப்டன் ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மத்திய பிரதேசம் 231 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.