செய்திகள்

88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் மத்திய பிரதேச அணி

88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் மத்திய பிரதேச அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

DIN

88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் மத்திய பிரதேச அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.  

1934-35 ஆம் ஆண்டிலிருந்து ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இது பொதுவாக பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டி என அழைக்கப்படுகிறது. 

மத்திய பிரதேச அணி  1988-1989 சீசனில் முதன் முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியுடன் மோதவிருக்கிறது. 

முதல் அரையிறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேசமும் வங்காள அணியும் போதியது. இதில் மத்திய பிரதேசம் 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது. 

அரையிறுதிப் போட்டியில் மத்தியப்பிரதேசத்தின் விக்கெட் கீப்பர் ஹிமன்ஷு மந்த்ரி முதல் இன்னிங்ஸில் 165 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்னும் எடுத்தும் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை அணியும் உத்திர பிரதேசம் அணியும் மோதியது. இதில் மும்பை முதல் இன்னிங்ஸில் 393 ரன்களை எடுத்தது.  இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியில் பிரித்வி ஷா 64, ஜெய்ஸ்வால் 181, அர்மான் ஜாபர் 127 ரன்களும், சர்பராஸ்கான் 59, சம்ஸ் முலானி 51 ரன்களுடன் இருவரும் 5ம்நாள் ஆட்டமிழக்காமல் விளையாடினர். இறுதியாக மும்பை அணி 533 ரன்களை எடுத்து போட்டி ட்ராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் மும்பை அதிக ரன்கள் எடுத்ததால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது. 

41 முறை ரஞ்சி கோப்பையை வெற்றி பெற்ற மும்பை அணியுடன் ஒருமுறைக் கூட ரஞ்சி கோப்பையை வெல்லாத மத்திய பிரதேச அணி மோதவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டி வரும் புதன்கிழமை (ஜூன் 22) பெங்களூருவில் நடைபெறவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT