செய்திகள்

24 வயதிலேயே அதிக அனுபவம் வாய்ந்தவர் ரிஷப் பந்த்: ஆஷிஷ் நெக்ரா

ரிஷப் பந்திற்க்கு 24 வயதிலேயே டி20 போட்டிகளில் அதிக அனுவமிருக்கிறதென முன்னாள் வீரர் ஆஷிஷ் நெக்ரா தெரித்துள்ளார். 

DIN

ரிஷப் பந்திற்க்கு 24 வயதிலேயே டி20 போட்டிகளில் அதிக அனுவமிருக்கிறதென முன்னாள் வீரர் ஆஷிஷ் நெக்ரா தெரித்துள்ளார். 

கே.எல். ராகுல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகவே ரிஷப் பந்த் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டுமே ஐபிஎல் போட்டிகளில் இருந்தே கேள்விக்குள்ளாகி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பந்த் பற்றி முன்னாள் வீரர் ஆஷிஷ் நெக்ரா கூறியதாவது: 

தற்போது அவருக்கு 24 வயதுதான் எனினும் டி20 போட்டிகளில் அதிக அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் 5 வருடமாக விளையாடி வருகிறார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் திரும்பவும் அணிக்கு திரும்புதால் அணியில் எற்படும் கடும் போட்டியினால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு  இருக்கலாம். விளையாட்டில் இது நடக்கத்தான் செய்யும். இந்தத் தொடரில் ரிஷப் அவரது பேட்டிங் வரிசையைவிட அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். 

பேட்டிங் வரிசை அவரை பெரிதாக பாதிக்காது. அவர் எப்படி கேப்டன்சியில் செயல்படுகிறார், அவர் அவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாட வேண்டும். அவருக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் அவரது மனநிலை மாறிவிடும். அவர் மீது அவரே அதிகமான அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளக் கூடாது. சீனியர் வீரர்களான ஹார்திக் பாண்டியா, ராகுல் திராவிட் போன்றோர் அவருக்கு உதவ வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT