காமன்வெல்த் ஹாக்கி: மன்பிரீத் தலைமையில் இந்திய அணி
பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள்காமன்வெல்த் ஹாக்கி: மன்பிரீத் தலைமையில் இந்திய அணி
பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் நடைபெறுவதாக இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இடையேயான கால இடைவெளி குறைவாக இருந்ததால் பிரதான இந்திய அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும், 2-ஆம் நிலை அணியை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அனுப்புவதென ஹாக்கி இந்தியா முடிவு செய்திருந்தது.
ஏனெனில், ஆசிய விளையாட்டுப் போட்டியானது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியாக இருந்தது. இந்நிலையில், கரோனா சூழல் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தற்போது பிரதான இந்திய அணியையே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி குரூப் "பி'-யில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பிரிவில் இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா அணிகள் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கானாவை ஜூலை 31-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. அதன் பிறகு எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியின் ஆட்டங்களுக்கு அமித் ரோஹிதாஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டிருந்தார். தற்போது காமன்வெல்த் போட்டிகளுக்காக மன்பிரீத் மீண்டும் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
அணி குறித்து தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் கூறுகையில், "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக திறமை வாய்ந்த அணியை நியமித்திருக்கிறோம். எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் டாப் அணிகளுடன் விûளாடிய அனுபவம் இந்த அணிக்கு இருக்கிறது. நெதர்லாந்தில் இருந்து அணியினர் திரும்பிய பிறகு ஓய்வை அடுத்து பெங்களூரு இந்திய விளையாட்டு ஆணையத்தின் முகாமில் பயிற்சி தொடங்கப்படும். புரோ லீக் போட்டியில் செயல்பட்டதன் அடிப்படையில் நிறை, குறைகளை ஆராய்ந்து காமன்வெல்த் போட்டிக்குத் தயாராவோம்' என்றார்.