செய்திகள்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIN

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 70 ரன்கள், ஆரோன் பின்ச் 62 ரன்கள், அலெக்ஸ் கேரி 49 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் சார்பாக வண்டர்சே 3 விக்கெட்டுகளும் சமீரா, தனஞ்ஜெயா, வெல்லாலகே தலா 1 விக்கெட் எடுத்தனர். 

அடுத்து ஆடிய இலங்கை அணி 48.3 ஓவரில் 292 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பதும் நிஷான்கா மற்றும் குஷால் மெண்டிஸ் வலுவான பார்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்டனர். இதில் பதும் நிஷான்கா 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 137 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். குஷால் மெண்டிஸ் 87 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழாக்காமல் இருந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 2 விக்கேட்டுகள், ஹேசல்வுட், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT