செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து தொடரில் பணியாற்றவுள்ள பிரபல வர்ணனையாளர்கள்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடர்களுக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இதற்காக அனைத்து இந்திய வீரர்களும் இங்கிலாந்துக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடர்களுக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாசிர் ஹுசைன், மைக் ஆர்தர்டன், டேவிட் கோவர், கிரீம் ஸ்வான், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்ளே ஆகியோர் ஆங்கில வர்ணனையில் பணியாற்றவுள்ளார்கள். 

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. 4 டெஸ்டுகளின் முடிவில் 2-1 என முன்னிலை பெற்று அசத்தியது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா அச்சம் காரணமாக மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT