செய்திகள்

டேரில் மிட்செல் எப்போதும் அணியின் சந்திப்பில் தவறாமல் குறிப்பு எடுப்பார் : சங்ககாரா

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா டேரில் மிட்செல் அணியின் சந்திப்பில் தவறாமல் குறிப்பு எடுக்கும் பழக்கமுடைவர் எனக் கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் நியூசிலாந்தைச் சார்ந்த டேரில் மிட்செல் ராஜஸ்தான் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். 2 போட்டிகளில் விளையாடி 33 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். தற்போது இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைப்பெற்று வருகிறது. இதில் டேரில் மிட்செல் அபாரமாக ஆடி வருகிறார். 

இந்தத் தொடரில் மொத்தம் 5 இன்னிங்ஸில் 482 ரன்களை எடுத்துள்ளார். இதில்  1 அரை சதம் 3 சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 190. இதில் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 120.5 என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சங்ககாரா இவரைப் பற்றி கூறியிருப்பதாவது: 

அணியின் சந்திப்பின் போது இவர் தவறாமல் ஐபாட்டை கொண்டு வருவார். கேள்வி கேட்பார், குறிப்பு எடுப்பார். கேள்வி கேட்க வேண்டுமே எனக் கேள்விக் கேட்கமாமல் ஈடுபாட்டுடன் கேட்பார். இரண்டு மாதம் கரோனா பாதுகாப்பு வலையத்தில் வலைப் பயிற்சியில் அவரது கடினமான உழைப்பு மற்றும் விளையாடியது இரண்டு போட்டிகளே என்றாலும் அவரது பேட்டிங் டாப் கிளாஸ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT