செய்திகள்

இலங்கை அணி தொடரினை வென்று சாதனை

DIN

இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இலங்கை அணி தொடரை வென்று சாதனைப் புரிந்துள்ளது. 

இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (ஜூன் 24) நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 43.1 ஓவரில் 160 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. சமிகா கருணா ரத்னே மட்டும் 75 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், குன்மேன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அடுத்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 39.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றாலும் தொடரினை 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இவ்வெற்றி என்பது 30 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் பெறும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 

டி-20 தொடரில் ஆஸ்திரேலியா வென்றது. ஒருநாள் தொடரை இலங்கை வென்றது. அடுத்து டெஸ்ட் தொடரினை வெல்லப்போவது யாரென்பது சுவாரசியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 29 முதல் டெஸ்ட் போட்டி நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT