செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிய வீரர் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. பிர்மிங்கமில் ஜூலை 1 அன்று டெஸ்ட் தொடங்குகிறது.

பிர்மிங்கம் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் சாம் பில்லிங்ஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலைமை கருதி பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சுமாராக பேட்டிங் செய்த ஸாக் கிராவ்லி அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி:

ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், பிராட், ஹாரி புரூக், ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரைக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

கல்லூரி கூட்டத்தில் மோதல்: திமுக மாநில நிா்வாகி காயம்

அம்பை வட்டாரத்தில் நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT