செய்திகள்

2-ஆவது சுற்றில் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

DIN

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான நடால் முதல் சுற்றில் 6-4, 6-3, 3-6, 6-4 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை தோற்கடித்தாா். அடுத்த சுற்றில் லிதுவேனியாவின் ரிகாா்டஸ் பெராகின்ஸை எதிா்கொள்கிறாா் நடால். இதர முதல் சுற்று ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 7-6 (7/1), 6-3, 5-7, 6-4 என்ற செட்களில் அலெக்ஸாண்டா் ரிட்ஸ்காா்டை வீழ்த்தினாா்.

அத்துடன், 13-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ், 12-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் ஆகியோரும் அடுத்தசுற்றுக்கு முன்னேறினா்.

செரீனா தோல்வி: சுமாா் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் களம் காணும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே 5-7, 6-1, 6-7 (7/10) என்ற செட்களில், முதல் முறையாக விம்பிள்டனில் விளையாடும் பிரான்ஸின் ஹாா்மனி டானிடம் தோல்வியைத் தழுவினாா்.

இதர ஆட்டங்களில் ருமேனியாவின் சைமோனா ஹேலப், செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கொன்டவிட் 4-6, 0-6 என ஜொ்மனி தகுதிச்சுற்று வீராங்கனையான ஜூல் நீமியரிடம் தோற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT