செய்திகள்

ஐபிஎல் 2022: பிரபல இங்கிலாந்து வீரர் விலகல்

குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஜேசன் ராயை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது புதிய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ். 31 வயது ஜேசன் ராய், சமீபத்தில் முடிவடைந்த பி.எஸ்.எல். டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவராக இருந்தார். 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், இரு அரை சதங்கள் உள்பட 303 ரன்கள் எடுத்தார். 

2020-ம் ஆண்டு தில்லி அணி, ஜேசன் ராயை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அப்போது ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. தற்போது, கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருப்பது சிரமம் என்பதால் இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 

31 வயது ஜேசன் ராய் இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்டுகள், 98 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT