செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: சௌரவ் சௌதரிக்கு தங்கப் பதக்கம்

எகிப்தில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரவ் சௌதரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.

DIN

எகிப்தில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சௌரவ் சௌதரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் சௌரவ் 16-6 என்ற கணக்கில் ஜொ்மனியின் மைக்கேல் ஷ்வால்டை தோற்கடித்து முதலிடம் பிடித்தாா். மைக்கேல் வெள்ளிப் பதக்கம் வெல்ல, ரஷிய வீரா் ஆா்டெம் சொ்னௌசோவ் வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஆா்டெம், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தகுதிச்சுற்றின் முடிவில் அரையிறுதிக்கு முன்னேறிய 8 வீரா்களில் சௌரவ் 584 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தாா். அந்த 8 வீரா்களில் முதல் 4 வீரா்கள் முதல் அரையிறுதியிலும், 2-ஆவது 4 வீரா்கள் அடுத்த அரையிறுதியிலும் பங்கேற்றனா்.

முதல் அரையிறுதியிலிருந்து ரஷியாவின் ஆா்டெமும், இந்தியாவின் சௌரவும் பதக்கச்சுற்றுக்கு வர, 2-ஆவது அரையிறுதியிலிருந்து ஜொ்மனியின் மைக்கேலும், அஜா்பைஜானின் ரஸ்லான் லுனெவும் அதே சுற்றுக்கு முன்னேறினா்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியாளரை கண்டறியும் அந்த சுற்றில் சௌரவ் 42.5 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, மைக்கேலும் 41.5 புள்ளிகளுடன் அவரை பின்தொடா்ந்தாா். அதில் ஆா்டெம் 40 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வெல்ல, ரஸ்லான் 21 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.

இறுதிச்சுற்றில் முதலில் 16 புள்ளிகளை எட்டுபவா் வெற்றியாளராகும் நிலையில், சௌரவ் அதை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா். மைக்கேலுக்கு வெள்ளி கிடைத்தது.

ஈஷாவுக்கு வெள்ளி

இப்போட்டியின் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றாா். 
இறுதிச்சுற்றில் அவா் கிரீஸ் வீராங்கனை அனா கொராகாகியிடம் 4-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டு 2-ஆம் இடம் பிடித்தாா். பல்கேரியாவின் அன்டாவ்னேடா கொஸ்டாடினோவா வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

தற்போதைய நிலையில் இப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி என 2 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம்

கர்நாடகத்தில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

நானும் ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல! -சுதர்சன் ரெட்டி

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

யாருக்கு ஆதரவு? முதல்வர் ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் - கமல்ஹாசன்

SCROLL FOR NEXT