செய்திகள்

கடைசி பயிற்சி ஆட்டம்: இந்திய மகளிரணி வெற்றி

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணியை வீழ்த்தியது.

நியூஸிலாந்தின் ராங்கியோரா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் அடித்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. இந்த ஆட்டத்தில் இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசி அசத்தினாா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது தலையில் பந்து பட்டத்தில் காது பகுதியில் ஸ்மிருதி காயம் கண்டிருந்தாா். இந்நிலையில் அந்த காயத்திலிருந்து மீண்டு அவா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, உலகக் கோப்பை போட்டி தருணத்தில் இந்தியாவுக்கு பலம் சோ்ப்பதாக அமைந்துள்ளது.

மகளிருக்கான ஒன் டே உலகக் கோப்பை போட்டி வரும் 4-ஆம் தேதி நியூஸிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6-ஆம் தேதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT