செய்திகள்

சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவு: காயம் காரணமாக பல ஐபிஎல் ஆட்டங்களைத் தவறவிடும் தீபக் சஹார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின்...

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் பல ஆட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் ஆட்டங்களில் இரு அரை சதங்களை அடித்து தன் பேட்டிங் திறமையையும் அவர் வெளிப்படுத்தினார். 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் தீபக் சஹார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார். இந்நிலையில் தீபக் சஹாரின் காயம் குணமாக பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து மார்ச் 26 முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களில் தீபக் சஹாரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி தொடங்கும் முன்பே பலத்த பின்னடைவை சிஎஸ்கே அணி எதிர்கொண்டுள்ளது. எனினும் ஐபிஎல் போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே அணியினருடன் தீபக் சஹார் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியிடமிருந்து தீபக் சஹாரின் உடல்நிலை குறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சிஎஸ்கே அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT