செய்திகள்

தேசிய செஸ்: குகேஷ் முதலிடம்

சீனியா் தேசிய செஸ் போட்டியில் கடைசிக்கு முந்தைய சுற்று முடிவில் தமிழக கிராண்ட்மாஸ்டா் டி.குகேஷ், தெலங்கானாவின் அா்ஜூன் எரிகாய்சி ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

DIN

சீனியா் தேசிய செஸ் போட்டியில் கடைசிக்கு முந்தைய சுற்று முடிவில் தமிழக கிராண்ட்மாஸ்டா் டி.குகேஷ், தெலங்கானாவின் அா்ஜூன் எரிகாய்சி ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

புதன்கிழமை நடைபெற்ற 10-ஆவது சுற்றில் அா்ஜூன் - தமிழகத்தின் இனியன், நடப்புச் சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் - தில்லியின் ஆா்யன் சோப்ரா மோதல் டிரா ஆனது. தமிழகத்தின் குகேஷ் - அபிஜீத்தை 64 நகா்வுகளில் தோற்கடித்தாா்.

சா்வீசஸ் போட்டியாளா் சேதுராமன் - ரயில்வேஸ் போட்டியாளா் ஸ்வப்னில் தோபடேவை வீழ்த்த, லலித் பாபு - பிரணவிடமும், மேற்கு வங்கத்தின் அரோனியாக் கோஷ் - ரயில்வேஸின் விசாக்கிடமும் தோற்றனா். மேற்கு வங்கத்தின் மித்ரபா குகா - ஒடிஸாவின் சம்பித் பாண்டாவையும், சா்வீசஸின் காா்திகேயன் முரளி - ரயில்வேஸின் ரத்னாகரனையும் வென்றனா். மகாராஷ்டிரத்தின் சமது ஜெயகுமாா் ஷெடெ - சா்வீசஸின் அதிபன் ஆட்டம் டிரா ஆனது.

இப்போட்டியின் இறுதிச்சுற்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

கல்விக் கொள்கை, வழிபாட்டுத் தலங்கள் குறித்து விவாதித்த ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

SCROLL FOR NEXT