செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

DIN

மகளிருக்கான ஒன் டே உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் அடிக்க, அடுத்து பாகிஸ்தான் 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் ஆட்டநாயகி ஆனார். 

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 52, தீப்தி சர்மா 40, பூஜா வஸ்த்ரகர் 67 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் மிதாலி ராஜ் 9, ஹர்மன்பிரீத் கெளர் 5, ரிச்சா கோஷ் 1 ரன்கள் அடிக்க, ஷஃபாலி வர்மா டக் அவுட்டானார். ஓவர்கள் முடிவில் ஸ்னேஹ ரானா 53, ஜுலன் கோஸ்வாமி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சாந்து, நிதா தார் ஆகியோர் தலா 2, டயானா பெய்க், அனம் அமின், ஃபாத்திமா சனா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் ஆடிய பாகிஸ்தானில் சிட்ரா அமீன் 30, ஜாவெரியா கான் 11, கேப்டன் பிஸ்மா மரூஃப் 15, ஒமாய்மா சோஹெய்ல் 5, நிதா 4, ஆலியா ரியாஸ் 11, ஃபாத்திமான 17, சிட்ரா நவாஸ் 12, டயானா 24, நஷ்ரா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அனம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பெüலிங்கில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 4, ஜுலன், ஸ்னேஹ ஆகியோர் தலா 2, மேக்னா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மிதாலி சாதனை: இத்துடன் 6 உலகக் கோப்பை போட்டிகளில் கலந்துகொண்ட முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவையும் சேர்த்து கணக்கில் கொண்டால், இந்த சாதனையை எட்டியிருக்கும் 3-ஆவது கிரிக்கெட்டர் மிதாலி. முன்னதாக, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தானின் ஜாவத் மியான் தத் ஆகியோர் மட்டுமே அத்தனை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT