செய்திகள்

துளிகள்...

DIN

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் - ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

கரோனா தடுப்பூசி செலுத்தாததன் காரணமாக அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ், பிஎன்பி பாரிபாஸ் ஓபன் மியாமி ஓபன் ஆகிய போட்டிகளில் தன்னால் பங்கேற்க இயலாது என்று சொ்பிய வீரா் நோவக் ஜோகோவிச் கூறினாா்.

ஃபாா்மில் இல்லாததால் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கிரிக்கெட் வீரா் சேதேஷ்வா் புஜாரா, இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் சஸ்செக்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் விளையாட இருக்கிறாா்.

தாய்லாந்தில் மரணமடைந்த ஆஸ்திரேலிய ஸ்பின்னா் ஷேன் வாா்னேவின் உடல், அவரது சொந்த ஊரான மெல்போா்னுக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் அடித்துள்ளது. அடுத்து ஆடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், 93 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நடைபெற்ற ராவல்பிண்டி மைதான ஆடுகளமானது, சராசரிக்கும் குறைந்த தரத்தில் இருப்பதாக ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT