செய்திகள்

உலகக் கோப்பை: இந்திய வீராங்கனை புதிய சாதனை

DIN

39 வயது ஜுலான் கோஸ்வாமி இந்திய அணிக்காக 2002 முதல் விளையாடி வருகிறார். 12 டெஸ்டுகள், 198 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்திய அணிக்காக 275க்கும் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாடி மகத்தான வீரராக அறியப்பட்டுள்ளார். 

நியூசிலாந்தில் தனது 5-வது உலகக் கோப்பையை விளையாடி வருகிறார் கோஸ்வாமி. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை இவர் தான். இதுவரை 249 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். வேறு எந்த வீராங்கனையும் 180 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்ததில்லை. 

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (39) எடுத்த பெருமையை இதற்கு முன்பு கொண்டிருந்தவர் ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டன். 52 வயதில் 2008-ல் காலமானார்.

இந்நிலையில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ஜுலான் கோஸ்வாமிக்குக் கிடைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அனிசா முகமதை 2 ரன்களுக்கு வீழ்த்தினார் கோஸ்வாமி. இதையடுத்து 40 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்கிற புதிய சாதனையைப் படைத்தார். 

மகளிர் உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள்

40 விக்கெட்டுகள் - ஜுலான் கோஸ்வாமி (31 ஆட்டங்கள்) 
39 - லின் ஃபுல்ஸ்டன் (20 ஆட்டங்கள்)
37 - கரோல் ஹாட்ஜஸ் (24 ஆட்டங்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT