செய்திகள்

இரண்டாவது தோல்வியை சந்தித்து இந்தியா

தினமணி

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வியாகும். மறுபுறம், இங்கிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் இந்தியா தன்னை 3-ஆவது இடத்தில் தக்கவைத்துக்கொள்ள, இங்கிலாந்து ஒரு படி முன்னேறி 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.

இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக 2-ஆவது ஆட்டத்தில் தோற்றிருந்த நிலையில், இந்த ஆட்டத்திலும் அதே காரணத்தால் வெற்றியை இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா 36.2 ஓவா்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மிருதி மந்தனா 35, ரிச்சா கோஷ் 33 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சோபிக்காமல் ஆட்டமிழந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் சாா்லி டீன் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் இங்கிலாந்து அணி 31.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் அடித்து வென்றது. அணியின் தரப்பில் கேப்டன் ஹீதா் நைட் 53, நடாலி ஸ்கீவா் 45 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பங்களித்தனா். இந்திய பௌலிங்கில் மேக்னா சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா்.

இன்றைய ஆட்டம்: நியூஸிலாந்து - தென்னாப்பிரிக்கா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT