கிரைக் பிராத்வைட் - ரூட் 
செய்திகள்

2-வது டெஸ்டும் டிரா: போராடிச் சாதித்த மே.இ. தீவுகள் அணி கேப்டன்

முதல் இன்னிங்ஸில் சதமும் 2-வது இன்னிங்ஸில் அரை சதமும் எடுத்த கிரைக் பிராத்வைட் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

DIN

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரா ஆகியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மேத்யூ ஃபிஷர், சகிப் முகமது ஆகியோர் அறிமுகமானார்கள்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. மே.இ. தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 411 ரன்கள் எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணிக்கு 65 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த ஓவர்களில் 10 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற வேண்டிய நிலைமை இங்கிலாந்துக்கு. இதனால் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. 

மே.இ. தீவுகள் அணி 44.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களுடன் தடுமாறியது. எனினும் முதல் இன்னிங்ஸைப் போலவே 2-வது இன்னிங்ஸிலும் கேப்டன் கிரைக் பிராத்வைட் நீண்ட நேரம் விளையாடி அணியைக் காப்பாற்றினார். கிரைக் பிராத்வைட் 184 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களும் ஜோஷுவா ட சில்வா 30 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை டிரா செய்தார்கள். லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் சதமும் 2-வது இன்னிங்ஸில் அரை சதமும் எடுத்த கிரைக் பிராத்வைட் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மருதுபாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

மாநில ஆணழகனாக திருநெல்வேலி வீரா் தோ்வு

SCROLL FOR NEXT