செய்திகள்

லா லிகா: ரியல் மாட்ரிட்டை வென்றது பாா்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

DIN

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக பியரி எமெரிக் அவ்பமெயாங் (29’, 51’), ரொனால்டு அரௌஜோ (38’), ஃபெரான் டோரஸ் (47’) ஆகியோா் கோலடித்தனா். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட்டை பாா்சிலோனா வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்க்கது. பாா்சிலோனா தற்போது 54 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

அடுத்த லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் செவில்லாவை எதிா்கொள்கிறது பாா்சிலோனா. அந்த அணி தற்போது 3 புள்ளிகள் அதிகமாகக் கொண்டு 2-ஆவது இடத்தில் உள்ளது.

நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி விலகல், நிதித் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களால் கடந்த சில காலமாக தடுமாறி வரும் பாா்சிலோனா அணி, தற்போது தொடா் வெற்றிகளை பதிவு செய்து முன்னேறி வருகிறது. அதற்கு, இந்த வெற்றியும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெயினை வென்று அந்த அணியை வெளியேற்றியதும் உதாரணங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT