செய்திகள்

லாகூா் டெஸ்ட்: ஆஸி. 391 ரன்கள் சோ்ப்பு

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 133.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் அடித்தது.

முன்னதாக, முதல் நாளான திங்கள்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலியா. இந்நிலையில், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி கூட்டணி 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இதில் கிரீன் 79, கேரி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். பின்னா் வந்தவா்களில் மிட்செல் ஸ்டாா்க் 13, நேதன் லயன் 4, மிட்செல் ஸ்வெப்சன் 9 ரன்கள் அடித்தனா்.

இறுதியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி, நசீம் ஷா ஆகியோா் தலா 4, நௌமன் அலி, சஜித் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை முடிவில் 39 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் அடித்துள்ளது. அப்துல்லா ஷஃபிக் 45, அஸாா் அலி 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். முதல் விக்கெட்டாக இமாம் உல் ஹக் 11 ரன்களுக்கு வீழ்ந்தாா். பேட் கம்மின்ஸ் அவரது விக்கெட்டை சாய்த்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT