அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் க்ரீன் 
செய்திகள்

பொறுமை காட்டும் பாகிஸ்தான்: 2-ம் நாள் முடிவில் 90/1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 301 ரன்கள் பின்தங்கியுள்ளது.

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 301 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸி. பேட்டிங் விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ஷஃபிக் மற்றும் அசார் அலி பாட்னர்ஷிப் அமைத்தனர். 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இன்னும் 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

ஷஃபிக் 45 ரன்களுடனும், அசார் அலி 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

SCROLL FOR NEXT