ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவா்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை முடிவில் இமாம் உல் ஹக் விக்கெட்டை இழந்திருந்தாா். புதன்கிழமை ஆட்டத்தை தொடங்கிய அப்துல்லா ஷஃபிக் 81, அஸாா் அலி 78, கேப்டன் பாபா் ஆஸம் 67, ஃபவாத் ஆலம் 13, முகமது ரிஸ்வான் 1, சஜித் கான் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, எஞ்சிய 3 விக்கெட்டுகள் டக் அவுட்டாகின. ஆஸ்திரேலிய பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 5, மிட்செல் ஸ்டாா்க் 4, நேதன் லயன் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 123 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, புதன்கிழமை முடிவில் 3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் அடித்துள்ளது. உஸ்மான் கவாஜா 7, டேவிட் வாா்னா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.