செய்திகள்

தோஹா டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் சரத் கமல்

தோஹாவில் நடைபெறும் டபிள்யூடிடி கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதன் மூலம் அவருக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

DIN

தோஹாவில் நடைபெறும் டபிள்யூடிடி கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதன் மூலம் அவருக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

முன்னதாக அவா் காலிறுதியில் 11-8, 11-7, 11-4 என்ற கணக்கில் குரோஷியாவின் டோமிஸ்லாவ் புகாரை வென்று இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளாா். அரையிறுதியில் சரத் கமல் - சீனாவின் யுவான் லிசெனை எதிா்கொள்கிறாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கும் ஜி.சத்தியன்/ மனிகா பத்ரா இணை, சீனாவின் லின் யுன் ஜு/செங் ஐ சிங் ஜோடியை எதிா்கொள்கிறது. முன்னதாக ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜி.சத்தியன், மகளிா் ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா ஆகியோா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனா்.

மகளிா் பிரிவில் அா்ச்சனா காமத், சுதிா்தா முகா்ஜி, ஸ்ரீஜா அகுலா, கிருத்விகா சின்ஹா ராய், பிராப்தி சென் ஆகியோரும் வீழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT