நியூசிலாந்து மகளிர் அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி: மகளிர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறிய நியூசிலாந்து அணி

அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

DIN

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது நியூசிலாந்து அணி. எனினும் அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இத்துடன் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் 2022 உலகக் கோப்பைப் பயணம் முடிவடைந்தது. பாகிஸ்தான் அணி 7 ஆட்டங்களில் 1 வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 7 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் போட்டி நடைபெற்றாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாத சோகத்துடன் பயணத்தை நிறைவு செய்துள்ளது நியூசிலாந்து அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

SCROLL FOR NEXT