செய்திகள்

ஆஸி.க்கு பின்னடைவு: பாக். தொடரிலிருந்து ஸ்மித் விலகல்

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்குப் பதில் மிட்செல் ஸ்வெப்சன் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொடர்களில் விளையாடவில்லை. கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் அபாட், அஷ்டன் அகார், ஜேசன் பெரென்டர்ஃப், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷியுஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஸாம்பா.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒரேயொரு டி20 ஆட்டம் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT